சட்ட விரோத மணல் அகழ்வு கண்டாவளையில் தடுத்து நிறுத்தம்....! மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு பாதுகாப்பு தரப்பினர் இணைந்து நடவடிக்கை.

#SriLanka #Arrest #Kilinochchi #Workers #illegal
Mugunthan Mugunthan
2 months ago
சட்ட விரோத மணல் அகழ்வு கண்டாவளையில் தடுத்து நிறுத்தம்....! மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு பாதுகாப்பு தரப்பினர் இணைந்து நடவடிக்கை.

 கிளிநொச்சி கண்டாவளை பெரியகுளம் பகுதியில் பாரியளவில் இடம்பெற்றுவந்த சட்டவிரோத மணல் அகழ்வு இன்று(27) தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 இப் பகுதியில் கடந்த இரு வாரங்களாக மிக மோசமான மணல் அகழ்வு இடம் பெறுவதாக கண்டாவளை பிரதேச அமைப்பாளர் தோழர் கமல் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்துக்கு வழங்கிய முறைப்பாட்டை அடுத்து குறித்த மணல் அகழ்வு இடம் பெறும் பகுதிக்கு இந்த நேரடி விஜயம் மேற்கொள்ளப்பட்டது. 

 மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உத்தியோகத்தர் பிரமிளன் கண்டாவளை இராணுவ பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்களும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டோரை கைது செய்யும் நோக்கில் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர்.

 பாதுகாப்பு தரப்பினர் அப்பகுதிக்கு விரைந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மணல் அகழ்வு க்காக பயன்படுத்திய கனரக வாகனங்களுடன் அகழ்வில் ஈடுபட்டோர் சற்று முன்னர் அங்கிருந்து தலைமறைவாகி இருந்தனர்.

images/content-image/1709047806.jpg

 அப்பகுதியில் இராணுவத்தினருடன் ஒருங்கிணைப்பு குழு உத்தியோகத்தர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் மண்வெட்டி உட்பட மணல் அகழ்வு க்காக பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் குடிநீர் கொள்கலன்களும் பற்றைக்குள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. 

 இன்று காலையும் அகழப்பட்ட மணலை ஓரிடப்படுத்தி அவற்றை டிப்பர் வாகனத்தில் ஏற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சற்று முன்பதாக அவ்விடத்தில் இருந்து சந்தேக நபர்கள் வெளியேறியதையும் இந்த விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.

 கனியவள சுரங்க பணியகம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு தகவலை வழங்கிய நிலையில் பெரிய குளம் கிராமசேவகரும் இந்த இடத்துக்கு சமுகமளித்திருந்தார்.

 சுமார் 4 டிப்பருக்கான மணல் எடுத்து செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் அவற்றை ஏற்றிச் செல்லும் முயற்சி இன்று தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது கவனத்துக்குரியது. 

images/content-image/1709047855.jpg

 அகழப்பட்ட இந்த மணலை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடாக சபையின் செயலாளர் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளருடன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு வின் இணைப்பாளர் அங்கிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அம் மணலை அங்கிருந்து உடன் அப்புறப்படுத்துவ தற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 இப்பகுதியில் தொடர்ந்து மணல் அகழ்வினை தடுப்பதற்கான ஏற்பாடாக பாதுகாப்பு தரப்பினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான வழிவகைகளும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டன.