பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#University
Dhushanthini K
1 year ago

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
குறித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையானது, நாளை (28.02 ) மற்றும் நாளை மறுதினம் (29.02 ) முன்னெனடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த , ஒரு வாரத்திற்குள் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.



