கோட்டாபயவிற்கு எதிரான மனுக்கள் தொடர்பில் விளக்கமளிக்க ஆஜராகபோவதில்லை : சட்டமா அதிபர் அறிவிப்பு!

பல மனுக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் நேற்று (26.02) உச்ச நீதிமன்றில் அறிவித்துள்ளார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் திகதி போராட்டம் இடம்பெற்ற போது ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்குமாறு கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மாற்றுக்கொள்கை மத்திய நிலையம் உள்ளிட்டோரினால் தாக்கல் செய்யப்பட்ட 06 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த, விக்கிரமா இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
இந்த மனுக்கள் பிரிதி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.



