ஸ்ரீலங்கன் விமான சேவையை மூட வேண்டிய நிலை வரலாம் - நிமர் சிறிபாலடி சில்வா!

ஸ்ரீலங்கன் விமான சேவையை தொடர்ந்தும் செயற்படுத்த முடியாத பட்சத்தில் விமான சேவையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26.02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அண்மைக்காலமாக நிறுவன ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக இந்நிறுவனத்தின் ஏற்றுக்கொள்ளும் தன்மை பூஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் இலவசமாக வழங்கப்பட்ட போதும் நிறுவனத்தை கையகப்படுத்த எவரும் முன்வரவில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதானி நிறுவனங்கள் மாத்திரமன்றி ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல நாடுகளும் இந்நாட்டிலுள்ள விமான நிலையத்தை கையகப்படுத்தக் காத்திருக்கின்றன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



