மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளதாக தகவல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பல நாள் மீன்பிடிக் கப்பலில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போனதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பே, பலப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ரசிக திலான் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீன்பிடி கப்பலின் நடத்துனர் சம்பவம் தொடர்பில் உரிமையாளருக்கு அறிவித்துள்ளதாகவும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியதையடுத்து பேருவளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.