இலங்கைக்கான அமெரிக்க தூதுவரில் மாற்றம்! முடிவடைகின்றது ஜூலியின் பதவிக் காலம்
#SriLanka
#America
#United States Ambassador to Sri Lanka
Mayoorikka
1 year ago

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கின் பதவிக்காலம் முடிவடைகின்ற நிலையில் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமிக்கப்படவுள்ளார்.
அமெரிக்க செனெட் இந்த நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கினால் இந்த நியமனத்தை ஏற்க தயார் என இலங்கை தெரிவித்துள்ளது.
எலிசபெத் கோர்ஸ்ட் தற்போது பாக்கிஸ்தானிற்கான முதன்மை துணைசெயலாளராககவும் துணைச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கிரிமியாவை ரஸ்யா ஆக்கிரமித்த காலப்பகுதியில் உக்ரைன் தூதரகத்தில் எலிசபெத்கோர்ஸ்ட் பணியாற்றியுள்ளார்



