அரசியலமைப்புச் பேரவையில் ஆஜராகவுள்ள சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம்!

#SriLanka #Parliament
Mayoorikka
1 year ago
அரசியலமைப்புச் பேரவையில் ஆஜராகவுள்ள  சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம்!

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இன்று (26) அரசியலமைப்பு பேரவையில் ஆஜராக உள்ளார்.

 சட்டச் சிக்கலைத் தீர்ப்பதற்காகவே அவர் அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சபைக்கான எந்தவொரு நியமனத்திற்கும் ஜனாதிபதியினால் பெயர் பரிந்துரைத்த பின்னர், குறிப்பிட்ட பெயர் அரசியலமைப்புச் சபையால் நிராகரிக்கப்படும்போது அநீதி இழைக்கப்பட்ட தரப்பு வழக்கு தொடர்ந்தால், அரசியலமைப்பு பேரவை சார்பில் சட்டமா அதிபரால் நிற்க முடியுமா என்ற தீர்மானத்தினை கேட்கவே சட்டமா அதிபரை அழைப்பதன் நோக்கம் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 அரசியலமைப்பு சபைக்கு சட்டமா அதிபர் ஆஜராகாத சந்தர்ப்பங்களில் தனியார் சட்டத்தரணி ஒருவரின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து விசாரிப்பது இந்த அழைப்பின் மற்றுமொரு நோக்கமாகும்.

 கடந்த காலங்களில், பொலிஸ்மா அதிபர் மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் மற்றும் நீதிபதி நியமனம் ஆகியவற்றில் ஜனாதிபதியின் பரிந்துரைகளை அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் சிலர் நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!