உக்ரைன் - ரஷ்ய போர் : இதுவரை 31 ஆயிரம் பேர் உயிரிழப்பு!
#SriLanka
#Russia
#Ukraine
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

உக்ரைனில் கடந்த இரண்டு வருடங்களில் 31,000 இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதாக ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்து இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேற்படி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த இராணுவ சூழ்நிலையில், கிட்டத்தட்ட பத்தாயிரம் பொதுமக்கள் இறந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் ஆரம்பமாகி தற்போது இரண்டு வருடங்கள் முழுதாக நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் இணக்கமான சூழ்நிலை உருவாகவில்லை.



