கொரிய மொழித் தேர்வு குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவிப்பு!

2024ஆம் ஆண்டுக்கான கொரிய மொழித் தேர்வுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டும் இன்று 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு (http://www.slbfe.lk) சென்று புள்ளி அமைப்பு பரீட்சை -2024 (உற்பத்தி, மீன்பிடி, கட்டுமானம், கப்பல் கட்டுதல், சேவை 1 மற்றும் சேவை 2) பதிவு செய்துள்ளதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 29ஆம் திகதிக்கு பின்னர் இணைப்பு மூடப்படவுள்ளதால், அதன் பின்னர் விண்ணப்பதாரருக்கு எந்தத் தகவலையும் வழங்க முடியாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
உற்பத்தி, மீன்பிடி, கப்பல் தொழில், கட்டுமானம் ஆகிய முக்கிய பகுதிகளின் கீழ் சேவை 1 மற்றும் சேவை 2 இன் கீழ் விண்ணப்பங்கள் செய்யப்பட வேண்டும்.



