உக்ரைனின் வணிகப் பகுதியை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் : மூவர் பலி!
#SriLanka
#War
#Tamilnews
#sri lanka tamil news
#Russia Ukraine
Thamilini
1 year ago
உக்ரைனின் கருங்கடல் துறைமுகமான ஒடேசாவில் உள்ள வணிகப் பகுதியில் ரஷ்ய நடத்திய தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா ஒரே இரவில் உக்ரைனில் 31 ஆளில்லா விமானங்களை ஏவியதாகவும் இதில் 23 இலக்குகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைனின் ஆளுனர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தின் தெற்குப் படைகள் ஒன்பது ட்ரோன்களை இடைமறித்ததாகவும், ஆனால் ட்ரோன் ஒன்று துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூவர் உயிரிழந்த நிலையில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.