துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காணும் கன்னி ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காணும் கன்னி ராசியினர் - ராசிபலன்

மேஷம்

சுவினி: நீண்டநாள் முயற்சிகள் வெற்றியாகும். அரசு வழி முயற்சி ஆதாயம் தரும். பரணி: உங்கள் செயலில் விவேகம் இருக்கும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். ரோகிணி: வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். வரவு செலவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். மிருகசீரிடம் 1,2: உறவினர்கள் உங்களைத் தேடி வருவார்கள். பழைய கடன்களை பைசல் செய்வீர்கள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: காலையில் உங்கள் முயற்சிகள் இழுபறியாகும். செயல்களில் தடுமாற்றம் உண்டாகும். திருவாதிரை: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: காலையில் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள். அதன்பின் உங்கள் விருப்பம் நிறைவேறும். பூசம்: அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் தேடிவரும். வியாபாரத்தில் லாபம் தோன்றும். ஆயில்யம்: உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். சிலர் புதிய இடம் வாங்குவீர்கள்.

சிம்மம்

மகம்: காலையில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூரம்: விஐபிகள் ஆதரவுடன் உங்கள் பிரச்னைக்கு இன்று தீர்வு காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். உத்திரம் 1: தடைபட்டிருந்த செயல்கள் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். நண்பர்கள் ஆதரவுடன் முயற்சி நிறைவேறும். அஸ்தம்: குடும்பத்தில் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். கூட்டுத் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். சித்திரை 1,2: துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்

சித்திரை 3,4: நீண்டநாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். திருமண வயதினருக்கு வரன் வரும். சுவாதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களின் எண்ணம் நிறைவேறும். விசாகம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சிலருக்கு புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். அனுஷம்: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பெரியோர் ஆதரவுடன் உங்கள் முயற்சி நிறைவேறும். கேட்டை: காலையில் சில நெருக்கடிகளை சந்தித்தாலும் அதன்பின் நிலைமை சீராகும். முயற்சி வெற்றியாகும்.

தனுசு

மூலம்: காலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அதன்பின் செயல்களில் எச்சரிக்கை அவசியம். பூராடம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்திராடம் 1: அரசு வழி முயற்சியில் ஆதாயம் உண்டாகும். உறவினர் ஆதரவால் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். மறைமுகத் தொல்லைகள் நீங்கும். திருவோணம்: உங்கள் நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். வரவுகளால் வளம் உண்டாகும். அவிட்டம் 1,2: வெளி வட்டாரத்தில் உங்கள் நிலை உயரும். குடும்பத்தினர் ஆதரவால் நினைத்ததை அடைவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் கவனம் தேவை. சதயம்: உறவினர்களால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். நண்பர்களுடன் இணைந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி 1,2,3: வரவேண்டிய பணம் உங்களைத் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும். உத்திரட்டாதி: புதிய நட்பால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். வாழ்க்கைத்துணைக்கும் உங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.