சிறந்த ஆண் கலைஞருக்கான விருதை வென்ற BTS உறுப்பினர்

#China #Asia #artist #Award #Music
Prasu
1 year ago
சிறந்த ஆண் கலைஞருக்கான விருதை வென்ற BTS உறுப்பினர்

49-வது பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகள் விழா கலிபோர்னியாவின் சாண்டா மோனிகாவில் நடந்தது. 1975-ம் ஆண்டு முதல் 'மக்கள் தேர்வு' விருது வழங்கும் விழா நடந்து வருகிறது.

பாப் பாடல், இசை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் சிறந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான சிறந்த ஆண் கலைஞர்' விருதை 'BTS'இசைக்குழுவை சேர்ந்த ஜங்குக் பெற்றுள்ளார். மக்களின் விருப்பத்தின்பேரில் தேர்வு செய்யப்படும் இவ்விருதை பெறும் ஆசியாவைச் சேர்ந்த முதல் கலைஞர் என்ற பெருமையை ஜியோன் ஜங்குக் பெற்று உள்ளார்.

தற்போது ஜங்குக் ராணுவத்தில் சேர்ந்துள்ளதால் விருதை நேரில் பெற வர முடியவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ''கோல்டன்' தனி ஆல்பத்தின் மூலம் இவர் அறிமுகமாகி பிரபலம் அடைந்தார். 

இந்த விருது கிடைத்த செய்தி அறிந்ததும் அவரது ரசிகர்கள் ஜங்குக்வுக்கு இணைய தளத்தில் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!