பெண்கள் உடல் ஆரோக்கியம் ஏன் அவசியம்..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

#SriLanka #Health #Women #Healthy
Mayoorikka
2 months ago
பெண்கள் உடல் ஆரோக்கியம் ஏன் அவசியம்..? கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்

உடல் எடையை குறைக்க விரும்பும் பலர், காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். இதனால் நினைத்ததற்கு மாறாக உடல் பருமன் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 உடல் எடையை குறைக்கிறோம் என்ற பெயரில் பெண்கள் கடைபிடிக்கின்ற தவறான வழிமுறைகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

 உடல் எடையை குறைக்கும் அதே வேளையில், அத்தியாவசியமான அனைத்து ஊட்டச்சத்துக்களை பெறுவதுடன், ஆரோக்கியமாக வாழ்வதன் தேவையை எடுத்துரைப்பதும் முக்கியது .

இந்த செய்தியில் உடல் எடையை குறைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.

 காலை உணவை தவிர்க்க வேண்டாம்;  உடல் எடையை குறைக்க விரும்பும் பலர், காலை உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். இதனால் நினைத்ததற்கு மாறாக உடல் பருமன் அதிகரிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மட்டுமல்லாமல் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை, ஊட்டச்சத்துக்களை தரக்கூடியதாக காலை உணவு அமைகிறது. ஆகவே அதை தவிர்க்கக்கூடாது.

 கால்சியம் சத்து அவசியமானது : பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது, குறிப்பாக மெனோபாஸ் அடையும் காலங்களில் எலும்புகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஷர்ட் நிறைந்த உணவுகளை தவிர்க்கக்கூடாது. தயிர், கீரையுடன் கூடிய காய்கறிகள், பாதாம் பருப்பு போன்றவற்றை 

சாப்பிட வேண்டும். மகப்பேறு கால சத்துகள் : பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மெக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், விட்டமின் பி12 போன்ற சத்துக்கள் அவசியமானது. அந்த வகையில் காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்து உணவுகள் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் பருமனை தவிர்க்க துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

 மது மற்றும் புகை கூடாது : இன்றைய நவீன காலகட்டத்தில், பெண்கள் மத்தியிலும் மதுப்பழக்கம் மற்றும் புகைப்படங்கள் போன்றவை அதிகரித்து வருகின்றன. இவை உடல் பருமனை அதிகரிக்க செய்யும். ஆகவே இது போன்ற பழக்கங்களை கைவிட வேண்டும்.

 உடற்பயிற்சி மற்றும் உடல் பரிசோதனை : எடை குறைக்கும் முயற்சியில் உடற்பயிற்சிகள் முக்கிய பங்கு வைக்கிறது. நாளொன்றுக்கு அரை மணி நேரம் வீதம்,வாரத்திற்கு குறைந்தபட்சம் 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

 பிரசவம் முதல் மெனோபாஸ் வரையில், பல்வேறு காரணங்களால் பெண்களின் உடல்நிலை பாதிக்கப்படும். ஆக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அவ்வபோது அவசியமான உடல் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.