மத்திய லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டம்!
#SriLanka
#world_news
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

மத்திய லண்டனில் பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீன ஒற்றுமை இயக்கம் இந்த எதிர்ப்பு பேரணியை ஏற்பாடு செய்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் அதில் இணைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு உடனடி போர் நிறுத்தம் தேவை என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.
ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் மேற்கு லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகில் சென்ற முதலாவது போராட்டம் இதுவென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த சுமார் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர், போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



