அலெக்ஸி நவால்னியின் உடல் எங்கு உள்ளது: ஆதரவாளர்கள் கேள்வி!
#SriLanka
#world_news
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரஷ்யாவில் சிறைச்சாலையில் உயிரிழந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் உடல் மறைக்கப்பட்டுள்ளதாக நவல்னியின் ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர் நவல்னியின் தாயாரிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் தற்போதுவரையில் அவருடைய உடல் எங்குவைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் அதிபர் விளாடிமிர் புதினின் உத்தரவின் பேரில் இந்த படுகொலை நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட நவல்னி, தொலைதூர சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



