நவல்னியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை! கடுமையாக எச்சரித்த அரசாங்கம்
#SriLanka
#Russia
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்களுக்கு, எதிராக அரசாங்கம் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
சிறையில் இருந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று (16.02) மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அவரது மரணத்தை அரசியல் சாதகமாக பயன்படுத்தி நாடு முழுவதும் வன்முறை போராட்டங்களை நடத்த மாட்டோம் என ரஷ்ய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை கௌரவிக்கும் வகையில் மாஸ்கோவின் வீதிகளில் பல்வேறு தரப்பினரும் நினைவு விழாக்களை ஏற்பாடு செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.