கும்ப ராசியினருக்கு கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 month ago
கும்ப ராசியினருக்கு கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நேற்றுவரை நீடித்த சங்கடங்கள் விலகும். வழக்கத்தைவிட கவனமுடன் செயல்படுவீர்கள். பரணி: குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள். கார்த்திகை 1: வியாபாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: உங்கள் நீண்டநாள் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். ரோகிணி: வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி வரும். தொழிலில் தோன்றிய நெருக்கடி விலகும். மிருகசீரிடம் 1,2: உங்கள் ஆற்றல் வெளிப்படும். முயற்சியில் இருந்த தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு சங்கடத்திற்கு ஆளாவீர்கள். பயணத்தில் கவனம் தேவை. திருவாதிரை: குடும்பத்தினர் ஆசையை நிறைவேற்றுவீர்கள். வரவை விட செலவு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும்.

கடகம்:

புனர்பூசம் 4: வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பூசம்: நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். பொருளாதார நிலையில் இருந்த தடைகள் விலகும். ஆயில்யம்: நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பார்த்த பணம் வந்துசேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: வியாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். விற்பனையில் லாபம் அதிகரிக்கும். பூரம்: உங்கள் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் செயலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் கொள்வீர்கள். அஸ்தம்: நீங்கள் மேற்கொள்ளும் செயல் ஆதாயமாகும். தந்தை வழி உறவுகளால் சங்கடம் தீரும். சித்திரை 1,2: தீராமல் இருந்த ஒரு பிரச்னை பெரியோர் உதவியுடன் இன்று முடிவிற்கு வரும்.

துலாம்

சித்திரை 3,4: ஆவலுடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும். பயணத்தில் சங்கடங்கள் உண்டாகும். சுவாதி: தேவையற்ற சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும். விசாகம் 1,2,3: உங்கள் முயற்சியின் காரணமாக எதிர்பார்த்ததை அடைவீர்கள். நெருக்கடியை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

விசாகம் 4: நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். அனுஷம்: வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கேட்டை: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் நீங்கும். உங்களது ஆலோசனையை நண்பர்கள் ஏற்பார்கள்.

தனுசு

மூலம்: உடலில் இருந்த சங்கடம் நீங்கும். உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும். பூராடம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். உறவினர்களிடம் உங்கள் செல்வாக்கு உயரும். உத்திராடம் 1: போட்டியாளர்கள் விலகுவர். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: குடும்பத்தினர் ஆதரவுடன் உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். திருவோணம்: குழந்தைகள் நலனில் அக்கறை அதிகரிக்கும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். உறவுகளிடம் சுமூகமான நிலை ஏற்படும்.

கும்பம்

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்கள். சதயம்: உங்கள் எதிர்பார்ப்புகள் இழுபறியாகும். கவனக்குறைவால் சில சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். சிலர் வீண்பழிக்கு ஆளாவீர்கள்.

மீனம்

பூரட்டாதி 4: நீண்டநாள் முயற்சி நிறைவேறும். துணிச்சலுடன் செயல்பட்டு நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். உத்திரட்டாதி: உறவுகளிடம் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மனதில் இருந்த சங்கடம் நீங்கும். ரேவதி: திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வந்துசேரும்.