மக்கள் தொகையை அதிகரிக்க குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தும் புட்டின்
#people
#Russia
#Putin
#President
#population
#baby
#Pregnant
Prasu
1 year ago
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது மக்களை மேலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது இரண்டு குழந்தைகளாவது இருப்பது முக்கியம் என வலியுறத்தியுள்ள அவர், ஒரு தேசமாக வாழ்வதற்கு இது முக்கியம் எனக் கூறியுள்ளார்.
ஒரே ஒரு குழந்தை இருந்தால், எங்கள் மக்கள் தொகை குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டில், ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது.
இந்த போரில் ஏராளமான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் புட்டினின் கருந்து வந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்யாவின் மக்கள் தொகை 146.4 மில்லியனாக இருந்தது