பிரான்ஸில் மின்வாரியம் மின் கட்டண உயர்வையடுத்து 10பில்லியன் யூரோக்கள் நிகர இலாபம் ஈட்டியுள்ளது

#France #France Tamil News #ElectricityBoard
Mugunthan Mugunthan
3 months ago
பிரான்ஸில் மின்வாரியம் மின் கட்டண உயர்வையடுத்து 10பில்லியன் யூரோக்கள் நிகர இலாபம் ஈட்டியுள்ளது

அடுத்தடுத்த மின் கட்டண உயர்வால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு €10 பில்லியன் யூரோக்கள் நிகர இலாபம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்களை உயிர்ப்பித்து இயக்கி வரும் EDF, சென்ற ஆண்டு 320.4 TWh மின்சாரத்தினை உற்பத்தி செய்திருந்தது. இதில் 41.4 டெராவட்ஸ் மின்சாரத்தினை அணுமின் நிலையங்களூடாக உற்பத்தி செய்திருந்தது. 

images/content-image/1708088713.jpg

அதன் காரணமாகவே இந்த இலாபத்தினை மின்சாரவாரியம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுகளின் பிரான்சில் மின்சார உற்பத்தி பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. கொவிட் 19 சூழ்நிலை காரணமாக அணுமின் நிலையங்களை பழுது பார்க்க முடியாத நிலையும் ஏற்பட்டிருந்தது.

 கடந்த வருடங்களில் பல பில்லியன் யூரோக்கள் இழப்பினையும் மின்சார வாரியம் சந்தித்திருந்தது. இந்நிலையில், சென்ற ஆண்டில் நிகர இலாபமாக €10 பில்லியன் யூரோக்கள் இலாபமீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.