ரிஷப ராசியினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, வரவேண்டிய பணம் வராமல் சங்கடத்திற்கு ஆளாவீர் - ராசிப்பலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 months ago
ரிஷப ராசியினருக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை, வரவேண்டிய பணம் வராமல் சங்கடத்திற்கு ஆளாவீர் - ராசிப்பலன்

மேஷம்

அசுவினி: முயற்சியில் இருந்த தடைகள் விலகும். செயல்கள் நீங்கள் எதிர்பார்த்த பலன் தரும். பரணி: எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். பணியில் மட்டும் முழுமையாக கவனம் செலுத்துவது நன்மையாகும். கார்த்திகை 1: செயல்களில் தடுமாற்றங்கள் உண்டாகும். மறைமுகத் தொல்லைகளுக்கு ஆளாவீர்கள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: வேலைபளு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். ரோகிணி: கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உங்கள் முயற்சியில் எதிர்பாராத இழுபறி உண்டாகும். மிருகசீரிடம் 1,2: வரவேண்டிய பணம் வராமல் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். பழைய கடன்களை அடைத்து நிம்மதி காண்பீர்கள். திருவாதிரை: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும். வராமல் இருந்த பணம் வந்து சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும். பூசம்: வியாபாரத்தில் உங்கள் அனுகுமுறையால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள். லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: நீண்டநாள் எண்ணம் இன்று நிறைவேறும். புதிய முயற்சி நன்மையாகும். சேமிப்பு உயரும்.

சிம்மம்

மகம்: குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெரியோர் ஆதரவுடன் உங்கள் செயல் லாபமாகும். பூரம்: வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். உத்திரம் 1: குடும்பத்தினர் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். பெரியோரின் ஆலோசனைகளை ஏற்பீர்கள்.

கன்னி

உத்திரம் 2,3,4: நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்கள். அஸ்தம்: உங்கள் எதிர்பார்ப்புகளில் தடை, தாமதம் ஏற்படும். மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். சித்திரை 1,2: செயல்களில் இடையூறுகளை சந்திப்பீர்கள். வரவு இழுபறியாகும். குடும்பத்தில் குழப்பநிலை ஏற்படும்.

துலாம்

சித்திரை 3,4: நண்பர்களால் ஆதாயம் அதிகரிக்கும். இரவு சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை அவசியம். சுவாதி: உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்களை விட்டு விலகிச்சென்றவர்கள் மீண்டும் வந்திணைவார்கள். விசாகம் 1,2,3: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: போட்டியாளர்கள் விலகுவார்கள். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும். அனுஷம்: உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். மறைமுகமாக தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். கேட்டை: நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடலில் இருந்த சங்கடம் நீங்கும்.

தனுசு

மூலம்: உறவினர்கள் வழியில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். உங்கள் வார்த்தைக்கு மதிப்புண்டாகும். பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உத்திராடம் 1: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னையை பேசி தீர்ப்பீர்கள்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தொழிலை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர்கள். நட்புகளால் நெருக்கடி விலகும். திருவோணம்: உழைப்பிற்கேற்ற வருவாய் உண்டாகும். எதிர்ப்புகளை சமாளித்து எதிர்பார்ப்பை அடைவீர்கள். அவிட்டம் 1,2: நீங்கள் ஈடுபடும் முயற்சி இழுபறிக்குப்பின் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்கள். சதயம்: வருமானத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் உண்டான சங்கடம் நீங்கும். பூரட்டாதி 1,2,3: ஒப்புக்கொண்ட வேலைகளை முடித்துக் கொடுப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.

மீனம்

பூரட்டாதி 4: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். உத்திரட்டாதி: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். ரேவதி: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரம் முடிவிற்கு வரும்.