வெற்று எரிவாயு சிலிண்டருடன் நுகர்வோர் விவகார அதிகார சபையை முற்றுகையிட்ட குழுவினர் – அங்கு பதற்றம்!
#SriLanka
#cylinders
Abi
37 minutes ago
சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (16) காலை வெற்று லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர் ஒன்றுடன் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது, அதிகார சபையின் தலைவரைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு அனுமதி கோரியதைத் தொடர்ந்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகார சபையின் தலைவரை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு வாய்ப்பு வழங்குமாறு குறித்த குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படும் வரை அதிகார சபை வளாகத்தை விட்டு வெளியேறப் போவதில்லை எனத் தெரிவித்து, அவர்கள் அங்கு காத்திருப்பதாகவும் அறியமுடிகின்றது.