பெல்கோரோட் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் குழந்தை உட்பட 6 பேர் பலி

#Death #Attack #Russia #Missile #Ukraine #War
Prasu
1 year ago
பெல்கோரோட் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் குழந்தை உட்பட 6 பேர் பலி

ரஷ்யாவின் தெற்கு நகரமான பெல்கோரோட் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் 4 குழந்தைகள் உட்பட 17 பேர் காயமடைந்துள்ளதாகவும், கூட்டாட்சி மையங்களில் இருந்து மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று நகருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அது கூறியுள்ளது.

 பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் கூறுகையில், அடுக்குமாடி கட்டிடங்கள், ஒரு கடை மற்றும் ஒரு தொழில்துறை நிறுவனமும் தாக்குதல்களில் சேதமடைந்தன. கியேவிலிருந்து உடனடி கருத்து எதுவும் வெளியிடப்படவில்லை

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!