பிரான்ஸ் மற்றும் உக்ரைன் இடையில் கைச்சாத்திடப்படவுள்ள முக்கிய ஒப்பந்தம்
#France
#government
#Ukraine
#Zelensky
#President
#Defense
#Agreement
Prasu
1 year ago

பிரான்ஸிற்கும் உக்ரையினுக்கும் இடையில் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த ஒப்பந்ததில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மற்றும் உக்ரையன் ஜனாதிபதி பிளடிமீர் செலன்ஸ்கி ஆகியோர் கையோப்பம் இடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உடன்படிக்கையானது நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்ய-உக்ரையன் போர் நடைபெற்றுவரும் நிலையில் அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் உக்ரையினுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் நிலையில் பிரான்ஸினால் மேற்கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் அரசியல் அரங்கில் பேசு பொருளாக அமைந்துள்ளது.



