புலம்பெயர் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

#SriLanka #Sri Lanka President #Australia #Meeting #Ranil wickremesinghe #Diaspora
Mayoorikka
1 year ago
புலம்பெயர் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் சந்தித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

அவுஸ்திரேலியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார நவீனமயமாக்கல் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கமளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 காலநிலை மாற்றம், சுற்றுலா மற்றும் பொருளாதார அபிவிருத்தி போன்ற துறைகளில் அரசாங்கத்திற்கு உதவ விரும்புவதாக கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையர்கள் தெரிவித்தனர்.

 அத்தோடு மேற்கு அவுஸ்திரேலிய முதல்வர் ரோஜர் குக் (Roger Cook) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் சற்று முன்னர் நடைபெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!