பொலிஸ் நிலைய கைதிகளுக்கு பாலில் சயனைட் நச்சு திரவம் கலக்கப்பட்டிருந்ததா? வெளியாகியுள்ள தகவல்

#SriLanka #Police #Hospital #Crime
Mayoorikka
1 year ago
பொலிஸ் நிலைய கைதிகளுக்கு பாலில் சயனைட் நச்சு திரவம் கலக்கப்பட்டிருந்ததா? வெளியாகியுள்ள தகவல்

ஆட்டுப்பட்டித்தெருவில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேகநபர்களும் அருந்திய பாலில் சயனைட் நச்சு திரவம் கலக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

 சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இதேவேளை, அவர்களுக்கு விஷம் கலந்த திரவத்தை வழங்கிய நபர்கள் தொடர்பில் தற்போது தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்தநிலையில், குறித்த சம்பவத்தின் போது கடமையில் ஈடுபட்டிருந்த சிறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூன்று உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!