தெனியாய வைத்தியசாலையில் முடங்கிய சத்திரசிகிச்சைகள்!
#SriLanka
#Hospital
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தெனியாய ஆதார வைத்தியசாலையில் அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஒரேயொரு விஷேட மயக்கவியல் வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளமையினால் அனைத்து சிசேரியன் சத்திரசிகிச்சைகள் மற்றும் ஏனைய சத்திரசிகிச்சைகளும் முடங்கியுள்ளதாக பதில் வைத்திய அத்தியட்சகர் ரந்தீவ் அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் கொட்டபொல பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் மகப்பேறு மற்றும் மகப்பேறு வைத்திய நிபுணர் மற்றும் விசேட சத்திரசிகிச்சை நிபுணர் இருந்தும் விசேட மயக்கவியல் நிபுணர் இல்லாத நிலையில் அந்த வைத்தியர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றதாக மேலும் தெரிவித்துள்ளார்.