22 நாட்களுக்கு முன் மாயமான மீன்பிடிக் கப்பல் : கதறும் உறவினர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Boat
Dhushanthini K
1 year ago

நீர்கொழும்பு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 22 நாட்களுக்கு முன்னர் புறப்பட்ட பலநாள் கப்பலான ‘ஜெரெம் சோன்’ தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நீர்கொழும்பு, வெல்லவிடிய, தொடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் நால்வர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த கப்பலில் பயணித்த நபர்களின் உறவினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், எங்கள் தந்தை கடலுக்குச் சென்று இன்று 20 நாட்களுக்கு மேலாகிறது. இன்னும் எந்தச் செய்தியும் இல்லை.
அவர்கள் சிரமத்தில் இருந்தால் அவர்களைக் காப்பாற்றுமாறு அரசைக் கேட்டுக்கொள்கிறோம். எனது தந்தையையும் மற்றவர்களையும் உயிருடன் கரைக்கு கொண்டு வாருங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.



