வவுனியாவை சேர்ந்த ஐவர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!
#SriLanka
#Vavuniya
#Tamil Nadu
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் தமிழகத்தில் தஞ்சம் கோரியுள்ளனர்.
வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியில் வசித்து வந்த ஐவரே இவ்வாறு இன்று (07.02) தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக மரைன்பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் பயணத்தை ஆரம்பித்த அவர்கள் இன்று அதிகாலை தனுஷ்கோடியில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக படகொன்றுக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ள தமிழக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.



