டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்! நடு வீதியில் குடைசாய்ந்த வாகனம்

#SriLanka #Jaffna #Police #Accident
Mayoorikka
1 year ago
டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்! நடு வீதியில் குடைசாய்ந்த வாகனம்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் மீது இன்று புதன்கிழமை (07) துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. 

 சட்டவிரோத மணலுடன், டிப்பர் வாகனம் ஒன்று வேகமாக பயணிப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், புத்தூர் பகுதியில் வைத்து டிப்பர் வாகனத்தை வழிமறித்துள்ளனர்.

 அதன்போது, டிப்பர் சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றமையால், வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனால் டிப்பர் வாகனம் வீதியில் குடைசாய்ந்தது. 

 சட்டவிரோத மணல் மண்ணை ஏற்றி சென்றமையால், சாரதி வாகனத்தை நிறுத்தவில்லை என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 அதேவேளை, டிப்பர் வாகன சாரதி, உரிமையாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு, அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!