குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news #House
Dhushanthini K
1 year ago
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க அமைச்சரவை அனுமதி!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள, மாடி வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  

இந்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு மாடி வீடுகளில் குடியிருக்கும் வருமானம் குறைந்த 50 ஆயிரம் குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதையும் இடைநிறுத்தி அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு, அந்த கட்டணம் அறவிடப்படுவதை இடைநிறுத்தி, அதற்கான உரிமையை அவர்களுக்கே வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!