வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

#SriLanka #Arrest #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
வீடு புகுந்து தங்க நகைகளை கொள்ளையடித்த நபர் கைது!

வீடு புகுந்து ஒருவரை காயப்படுத்தி தங்க நகை மற்றும் தங்க மோதிரத்தை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஜனவரி 31ஆம் திகதி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி 540,000 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மெகொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.  

இதன்படி, நேற்று (06.02) காலை கொடகம மற்றும் பிரண்டிகம்பல பிரதேசத்தில் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதோடு, மீகொட பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர்கள் இருவரும் 24 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் சந்தேகநபர் 43 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் அனைவரும் ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள். சந்தேகநபர்கள் கொள்ளையிடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் 02 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேற்படி சந்தேகநபராலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போதைய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!