இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார் அனுர குமார திஸாநாயக்க!
#India
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Dhushanthini K
1 year ago

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள தேசிய மக்கள் படையின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை நேற்று (05.02) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு சர்தார் பட்டேல் பவனில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் அவர் நேற்று சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.



