வெளிநாடுகளில் சிக்கிய 15 பாதாள குழு தலைவர்கள்: இலங்கை கொண்டுவர நடவடிக்கை

ரஷ்யா, ஓமான், துபாய் மற்றும் இந்தியாவில் சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 இலங்கை பாதாள உலக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அமைச்சர் விஜேபேல, சந்தேக நபர்களில் தேடப்படும் பாதாள உலக நபர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அடங்குவதாகக் கூறியுள்ளார்.
அத்தோடு, அவர்கள் கைது செய்யப்பட்ட நாடுகளில் விசாரணைகள் முடிந்த பிறகு அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வெளிநாடுகளில் தற்போது வசிக்கும் தேடப்படும் சந்தேக நபர்களைக் கைது செய்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
“வெளிநாட்டு நாடுகளின் உதவியுடன் இந்த சந்தேக நபர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் முக அங்கீகார அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
தேடப்படும் சந்தேக நபர்களின் தரவுத்தளத்தை காவல்துறை பராமரித்து வருகிறது.
குற்றங்களில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் சோதனைகள், ஆய்வுகள் மற்றும் சோதனைச் சாவடிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன,” என்றார்.
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை



