களனி பல்கலைக்கழகத்தின் நிர்வாக கட்டத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
#University
Dhushanthini K
1 year ago

களனி பல்கலைக்கழகத்தின் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல கோரிக்கைகளை முன்வைத்து, நேற்று (29.01) இரவு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தைக் கலைத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக களனி பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தது.



