கொழும்பில் இன்றுமுதல் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு : வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

#SriLanka #Colombo #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Driver
Dhushanthini K
1 year ago
கொழும்பில் இன்றுமுதல் விசேட போக்குவரத்து கட்டுப்பாடு : வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

கொழும்பில் இன்று (30.01) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் 76 ஆவது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் மேற்படி போக்குவரத்து ஒத்திவைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

இதன்படி இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை பல தடவைகள் வீதி மூடல் மற்றும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

காலி முகத்துவார பகுதியில் இந்த ஒத்திகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை காலை 06.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், பெப்ரவரி 03 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி முதல் பெப்ரவரி 04 ஆம் திகதி நிகழ்வு நிறைவடையும் வரையிலும் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள, வீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு பணிப்பாளர் அலுவலகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திரு.இந்திக்க ஹபுகொட "கொள்ளுப்பிட்டியில் இருந்து கொழும்புக்கு வரும் வாகனங்கள் தடைசெய்யப்படும். மேலும், வாகனங்கள் காலி வீதி வழியாக கொழும்பு கோட்டையிலிருந்து வெளியேறுவது தடைசெய்யப்படும்” என அறிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!