சோமாலிய கடற்கொள்ளையர்கள் வசம் சிக்கியிருந்த இலங்கை கப்பல் மீட்பு!
#SriLanka
#Somalia
#Tamilnews
#sri lanka tamil news
#Rescue
#Ship
Dhushanthini K
1 year ago

"லோரன்சோ சோன் 04" என்ற பல நாள் கப்பல் சீஷெல்ஸ் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
மூன்று கடற்கொள்ளையர்களையும் சீஷெல்ஸ் கடற்படையினர் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீன்பிடி கப்பலில் இருந்த 06 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளதாக அந்நாட்டு கடற்படையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன்படி, குறித்த மீன்பிடி கப்பல் விக்டோரியாவின் தலைநகரான சீசெல்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 12ஆம் திகதி தனது கன்னிப் பயணத்தில் இணைந்த “Lorenzo Son 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த சனிக்கிழமை 6 மீனவர்களுடன் சோமாலிய கடற்கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



