கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாணவர்களுக்கு பிணை!

#SriLanka #Student #Lanka4 #University #Bail #lanka4Media #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
கைது செய்யப்பட்ட சப்ரகமுவ மாணவர்களுக்கு பிணை!

மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த பிணை வழங்கல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு இலட்சம் ரூபாய் அடங்கலான சரீர பிணையில் அவர்களை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவி ஒருவரை பகிடிவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 6 மாணவர்கள் நேற்று சமனலவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!