வனஜீவராசி அதிகாரிகள் மீது தாக்குதல் - இருவர் கைது!

அநுராதபுரம் - மொரகொட பகுதியில் வீடொன்றை சோதனையிடுவதற்காக சென்ற வனஜீவராசிகள் அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் மான் இறைச்சி சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வனஜீவராசிகள் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், அவர்கள் வீட்டு உரிமையாளர்களினால் தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையை தொடர்ந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மான் இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலில் காயமடைந்த வனஜீவராசிகள் அதிகாரி யகல்ல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



