பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள திருத்த சட்டம்!

#SriLanka #Women #Law #Lanka4 #lanka4Media #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள திருத்த சட்டம்!

பெண்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் வியாபார நிலையம் மற்றும் அலுவலக பணியாளர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நிறுவனங்களில் பத்து மணிக்குப் பிறகும் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம்.

images/content-image/1706509512.jpg

இவ்வாறு பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு, போக்குவரத்து, ஓய்வெடுக்கும் வசதி உள்ளிட்ட நலன் தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறுவன உரிமையாளர் வழங்க வேண்டும் என திருத்தப்பட்ட சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

பதினெட்டு வயது நிரம்பிய பெண்களை மட்டுமே இவ்வாறு பணியில் அமர்த்த முடியும். இந்த திருத்தம் தொடர்பான சட்டமூலம் தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!