தேர்தல்களில் தாக்கம் செலுத்தும் சிறுப்பான்மையினர் : உற்றுநோக்கும் சிங்கள அரசியல் தலைவர்கள்!

இலங்கையில் அடுத்து நடக்க இருக்கும் பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல்களில் தமிழ் மக்களின் பங்கு முக்கிய தாக்கம் செலுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக தற்போது சிறுபான்மையின் கட்சிகளின் வாக்கு வீதம் 31% அதிகரித்துள்ளது. ஆகவே தேர்தல்களில் தமிழர் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுதும் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அண்மையில் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு குறித்தும் இலங்கையின் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்தனர்.
இதேவேளையில் தற்போது இலங்கையின் பொருளாதாரம் மக்கள் மத்தியில் பாரிய சுமையாக மாறியிருப்பதால் மக்கள் அரசியல் நிலைமை குறித்து ஒரு விரக்தி நிலையில் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக நாடாளாவிய ரீதியில் உள்ள அனைத்து மக்கள் மத்தியிலும் அரசியல் தலைவர்கள் மேல் பாரிய விரக்தி இருப்பதை காணக்கூடியதாக உள்ளது. ஆகவே அடுத்த தேர்தல் இவர்தான் ஆட்சியாளராக இருப்பார் என்பதை ஆருடமாகக்கூட சொல்ல முடியாத ஒரு நிலை காணப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.



