பாதாள உலகக் குழுக்களுக்கு கெடு விதித்த திரான் அலஸ் : கடும் தொனியில் எச்சரிக்கை!

எதிர்வரும் ஜூன் மாத இறுதிக்குள் இலங்கையில் உள்ள அனைத்து பாதாள உலகக் குழுக்களும் போதைப்பொருள் விநியோக வலையமைப்புகளும் ஒழிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்களை பொருட்படுத்தப்போவதில்லை எனக் கூறிய அவர், நீதி நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன், நாட்டில் போதைப்பொருள்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது எனக் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.



