யாழில் உருவாகும் புதிய இயக்கம் : போதை ஒழிப்பே இவர்களது நோக்கமாம்! என்ன செய்யப்போகிறார்கள்?

யாழில் ஒரு புதிய இயக்கத்தை சில இளைஞர்கள் ஆரம்பிக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறியமுடிகிறது.
குறிப்பாக மாணவர்கள், உத்தியோகத்தர்கள், வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள், கணினி தொழில்நுட்பவியலாளர்களுடன் மறைமுகமாக சில நல்ல கைக்கூலி வாங்காத போலிஸ் உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு பாதிக்கப்பட்ட சில பெற்றோரும் இவர்களுக்கு உதவுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இவர்களுக்கு அபாயம்?
இலங்கையில் போதைப் பொருள் வியாபாரத்தின் ஆணிவேராக இருப்பதும் உடந்தையாக இருப்பதும் பெரிய சில பண முதலைகளும், சில அரசியல்வாதிகளும், சில பாடசாலை ஆசிரியர், அதிபர்களும் சில சட்டத்த்கரணிகளும், சில பாதுகாப்பு உத்தியோகத்தரும் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
இவர்கள் இந்த இளைஞர் இயக்கத்திற்கு இடையூறு அல்லது ஆபத்து விளைவிப்பார்கள் என்பது நிஜ உண்மை. போதைப் பொருள் விற்பனைக்கு பின்னால் ஒரு சில ரவுடி கும்பல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர்களை சட்ட ரீதியாக காப்பாற்றுவதும் இந்த போதைப் பொருள் கடத்தும் கும்பலை காப்பாற்றும் சட்டத்தரணிகளே. எது எவ்வாறாக இருந்தாலும் நாமும் இம்முயர்ச்சிக்கு ஆதரவு வழங்குவோம் என மக்களும் பொது அமைப்புக்களும், சில வெளி நாட்டில் வாழும் உறவுகளும் கூறியிருப்பதாக அறிய முடிகிறது.
போதை ஒழிப்பு என்பது ஒரு குருசேத்திர்ப் போர் ஆகும்.
இங்கே குற்றவாளிகளை விட நிரபராதிகளே அதிகம். பண பலத்தால் தண்டிக்கப்படுவது நடக்கும் எழுதப்படாத சட்டம்.
நடப்பது நல்ல தாக நடந்தால் சிறப்பு.
Lanka4 வின் பிரத்தியேக செய்தி!



