சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையின் கப்பல்!

#SriLanka #Somalia #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Ship
Dhushanthini K
1 year ago
சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இலங்கையின் கப்பல்!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் பல நாள் பயணக் கப்பல் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அரபிக்கடலில் மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு கடத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடந்த 12ஆம் திகதி ஹலவத்த, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட “லொரென்சோ சோன் 04” என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலையும், 06 மீனவர்களையும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.

 இலங்கை கடற்பரப்பில் இருந்து 1160 கடல் மைல் தொலைவில் உள்ள கடல் பகுதியில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடத்தப்பட்ட மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!