பாதி தகனம் செய்யப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம்!

#SriLanka #Police #Investigation #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
பாதி தகனம் செய்யப்பட்ட நிலையில் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட சடலம்!

பாதி தகனம் செய்யப்பட்ட ஒரு சடலம் வெளியே எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ வத்துபிட்டிவல வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெயாங்கொட பகுதியைச் சேர்ந்த ஆர்.டி.சிறிசோம ரணசிங்க என்ற 81 வயதுடைய பெண் மீரிகமவில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது மரணம் குறித்த தகவல்களுக்கு அவரது பாதுகாவலர் எந்த பதிலும் தெரிவிக்காததால், மீரிகம மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய முதியோர் இல்லத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 இந்தநிலையில், குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர் ஒருவர் கம்பஹா பிரிவு காவல்துறை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, மீரிகம காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!