தெரிவு செய்யப்பட்டனர் தமிழரசு கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழு, பொதுச்சபை கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெற்றது.
இதன்போது, கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.
அதில் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு திருகோணமலை உப்புவெளியிலுள்ள பீச் ஹொட்டலில் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது,புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. அதனடிப்படையில், கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே.சிவஞானம், இணை பொருளாளர்கள் ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன், அரியநேந்திரன், சத்தியலிங்கம் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இணை செயலாளர்களாக சாந்தி சிறிஸ் கந்தராஜா, ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.



