பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி!
#SriLanka
#Arrest
#Police
#Crime
#Lanka4
#Sri Lankan Army
Mayoorikka
1 year ago

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கஹதுடுவ, உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஜூன் மாதம் 21 ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரைக் சுட்டுக் கொன்ற சம்பவம் மற்றும் 18 ஆம் திகதி பலபிட்டிய பிரதேசத்தில் கொலை செய்ய திட்டமிட்டமை தொடர்பில் சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சோதனையின் போது சந்தேகநபரின் வீட்டில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.



