திருகோணமலை- அனுராதபுர சந்தியில் விபத்து-

#SriLanka #ADDA #shelvazug #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Lanka4
2 hours ago
திருகோணமலை- அனுராதபுர சந்தியில் விபத்து-

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மரணம்!! திருகோணமலை அனுராதபுர சந்தி விபுலானந்த பாடசாலைக்கு முன்னால் உள்ள வீதிக்கடவையில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே. நாகேஸ்வரன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூதூர் சம்பூரிலிருந்து மரணச் சடங்கு ஒன்றுக்கு பஸ்ஸில் வருகை தந்து மஞ்சக் கோட்டின் ஊடாக வீதியை கடக்க முற்பட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பெண்ணொருவர் மோதியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இவ்விபத்து இன்று (14) இடம் பெற்றுள்ளது. இவ்விபத்தில் மூதூர் சம்பூர் பகுதியைச் சேர்ந்த கே.நாகேஸ்வரன் (71வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

images/content-image/1754511373.jpg




உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!