கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர் கிரிஷாந்த பெரேராவுக்கு ஆதரவாக போராட்டம்!

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கு முன்பாக வைத்தியர் கிரிஷாந்த பெரேராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இன்று (22.01) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது விசேட வைத்தியர் கிருசாந்த பெரேரா தென் மாகாணத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய வைத்தியர் என ஆர்ப்பாட்டகாரர்கள் சுட்டிக்காட்டினர்.
கடந்த 16ஆம் திகதி சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்தம் காரணமாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவின் தலைவர் கிருஷாந்த பெரேராவிற்கும் கனிஷ்ட ஊழியர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இளநிலை ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வைத்தியர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். விளக்கமறியலில் உள்ள வைத்தியர் தற்போது மாரடைப்பு காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வைத்தியர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவங்கள் காரணமாக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி கிரிஷாந்த பெரேரா ஏமாற்றமடைந்துள்ளதாகவும், குறித்த நேரத்திற்கு முன்னதாகவே ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



