மின்சார சபை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தமை தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மின்சார சபை ஊழியர்கள் குழு ஒன்றின் பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இன்று (22.01) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்களின் தலைமையில் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பங்குபற்ற உள்ளன.
இந்த கலந்துரையாடல் இன்று காலை 09 மணிக்கு மருதானை பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இன்று காலை 07 மணிக்கு இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக துண்டுப் பிரசுர விநியோகப் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவும் தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
அத்துடன், இன்று நண்பகல் 12 மணிக்கு இலங்கை மின்சார சபைத் தலைமையகத்திற்கு முன்பாக சிவில் அமைப்புக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.



