டால்பின்களை பாதுகாக்க பிரான்ஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

#France #government #Fisherman #Fish #Banned #lanka4Media #lanka4.com #dolphin
Prasu
1 year ago
டால்பின்களை பாதுகாக்க பிரான்ஸ் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

மேற்கு ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், வடக்கு கடல், ஆங்கில கால்வாய், அட்லான்டிக் கடல் மற்றும் மத்திய தரை கடலால் சூழப்பட்டுள்ளது.

சில வருடங்களாக அட்லான்டிக் கடற்கரை பகுதியில் பல டால்பின்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது வழக்கமான நிகழ்வாக இருந்தது.

மீனிபிடிக்க செல்பவர்களின் படகுகளின் எஞ்சின் கியர்களிலும், சிறு ரக கப்பல்களின் அடியிலும், வலைகளிலும், கயிறுகளிலும் டால்பின்கள் சிக்கி உயிரிழப்பதாக நீண்ட காலமாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

ஆனால், அரசு இது குறித்து முறையான நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அழிந்து வரும் டால்பின்களின் இனத்தை காக்க அவர்கள் அந்நாட்டின் நீதிமன்றத்தை அணுகினர். அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதை தொடர்ந்து, 2024 ஜனவரி 22 முதல் பிப்ரவரி 20 வரை அனைத்து விதமான வர்த்தக ரீதியான மீன்பிடி பணிகளை பிரான்ஸ் தடை செய்துள்ளது. உள்ளூர் மீனவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தடை தொடரும் என அரசு அறிவித்தது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!